ETV Bharat / state

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிறவி குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கும் சேவை மையம்!

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், பிறவி குறைபாடு நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தை இன்று (செப்.25) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Sep 25, 2020, 5:19 PM IST

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிறவி குறைபாடு நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப்.25) திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “அரசு மருத்துவமனைகளில் எந்தவித தடையும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் குழந்தைகளின் சிகிச்சைகளின் மீது தனிக்கவனம் செலுத்திவந்தோம்.

பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சையளிக்கும் விதமாக அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்களும் இங்கு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் விரும்பும் வகையில் இந்த மருத்துவ மையம் உள்ளது. கீழ்ப்பாக்கத்தை தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 70 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 11 ஆயிரத்து 715 பேருக்கு இதுவரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் 59 லட்சம் ரூபாய் செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 34 மையங்கள் இதுபோல செயல்பட்டு வருகிறது.

தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம்

தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனை அணுகி மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க பொதுமக்களுக்கு கோரிக்கை வைக்கிறோம். இதில் எந்த அலட்சியமும் மக்கள் காட்ட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்புப் பணி, மக்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ.7,321 கோடி செலவு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.