ராமநாதபுரம் துரத்தியேந்தலை சேர்ந்த கூலித் தொழிலாளி வெள்ளூர், தனது மனைவி மாரிக்கண்ணுவுடன் கடைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, நயினார்கோயில் அருகே காவல்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். ஹெல்மெட் அணியாத வெள்ளூரை போலீசார் தடுத்து நிறுத்த முயச்சித்தார்கள்.
வண்டியை நிறுத்துவதற்குள் காவலர்களில் ஒருவர் லத்தியால் தாக்கியதில் தலையில் பலமாக அடிபட்டு மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே மாரிக்கண்ணு மயங்கி விழுந்தார். இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தி அடிப்படையில் வழக்கை தாமாகவே விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.