சென்னை அருகேயுள்ள கொடுங்கையூர் சின்ன ஆண்டிமடம் சாலையில் காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தச் சாலை வழியாக சந்தேகப்படும்படியாக ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றுள்ளது.
இதைக்கண்ட காவலர்கள் உடனடியாக அந்த ஆட்டோவை இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றபோது அந்த ஆட்டோவை ஓட்டி வந்த நபர் ஆட்டோவை விட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் காவலர்கள் ஆட்டோவை பறிமுதல் செய்து அதிலுள்ள மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பாரக் உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் 9 மூட்டைகளில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவின் எண்ணை வைத்து உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:Latest Crime News:சேலத்தில் பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!