சென்னை மாநகராட்சியில் கிண்டி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் உள்பகுதியிலேயே சிறுவர்கள் விளையாடுவதற்கு என இடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுவர்களுக்கு ஏதுவாக விளையாடுவதற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்துசெல்வர். அதற்கான நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ. 5 ,பெரியவர்களுக்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பூங்காவிற்கு வருவோருக்கான நுழைவு கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் இனி பூங்காவிற்கு வரும் சிறுவர்களுக்கு ரூ. 15-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் பெறப்படவுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புலி, பென் குயின், கங்காரு, வெள்ளை பாண்டா, அனகோண்டா, டைனோசர் உள்ளிட்ட மிருகங்களின் அனிமேஷன் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு வரக்கூடிய வருமானம் போதுமானதாக இல்லை என்பதால் பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு!