சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர், ஜிஎஸ்டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழ்நாடு சந்திக்கும்.
ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்