தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஒன்பதாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிற்பகல் பேரவை தொடங்கியபோது, வணிகவரித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு அரசு அளித்த அழுத்தம் காரணமாகவே, 18 விழுக்காடாக இருந்த கைத்தறி பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து அதை பூஜ்ஜிய விழுக்காடாக குறைக்க வலியுறுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாகவே 39 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. மேலும் 69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க தொடர்ந்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்" என்று தெரிவித்தார்.
அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான்,"பாஜக தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டி.,யில் மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் குறைகளோடு உள்ள ஜிஎஸ்டியால் வணிகர்கள் வாழ்வாரத்தையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்" கூறினார்.
இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, "அதிகப்படியான வருவாய் ஈட்டும் விதமாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் வணிகர்களுக்கு இருந்தது. ஆனால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜிஎஸ்டியை சிறப்பாக கையாளும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது" என்றார்.
பத்திரப்பதிவு மூலமாக அரசுக்கு கடந்த ஆண்டவிட 87ஆயிரத்து 905 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டு 73 ஆயிரத்து 148 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதோடு ஒப்பிட்டு பார்க்கையில் 14 ஆயிரத்து 756 கோடி ரூபாய் வரி வருவாய் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Intro:Body:
[7/9, 4:02 PM] VT Vijay: பிற்பகல் நேர பேரவை தொடங்கியது
[7/9, 4:23 PM] VT Vijay: வணிக வரித்துறை 2018 19 ஆம் நிதியாண்டில் 87 905.26 கோடி வரி வசூலித்து உள்ளது இது ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட அதன் மூலம் பெறப்பட்ட இழப்பீடு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவை வரி தேர்வு தொகையையும் உள்ளடக்கியது இந்த தொகையானது 2017_ 2018 ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 14756.98 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டு 20. 17 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் நிலையற்ற பொருளாதார சூழ்நிலையில் கூட சாத்தியமானது என்று வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[7/9, 4:26 PM] VT Vijay: ஆவணங்கள் பதிவு செய்ததன் மூலம் கடந்த ஆண்டு 11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் விற்பனை, பரிவர்த்தனை, தானம், அடமானம் போன்ற ஆவணப்பதிவுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும் திருமணப்பதிவு, சங்கம் மற்றும் சீட்டுப்பதிவு, கூட்டு வணிகப்பதிவு, வில்லங்க சான்று மற்றும் நகல் வழங்குதல், பிறப்பு இறப்பு சான்று போன்ற 25 லட்சத்து 73 ஆயிரத்து 478 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் 11 ஆயிரத்து 71 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயக கிடைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[7/9, 4:35 PM] VT Vijay: *வணிகவரி கொள்கை விளக்க குறிப்பில் தகவல்*
2017-18ம் ஆண்டில் 129.07 லட்சம் மதிப்பீட்டில் 10 வணிகவரி அலுவலகக் கட்டடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஆணை வெளியிடப்பட்டு தற்போது 9 வணிகவரி அலுவலகக் கட்டடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு உள்ளன.
மேலும் வணிகவரி பணியாளர் பயிற்சி நிலைய கட்டடத்தில் இயங்கி வரும் திருச்சி கோட்ட இணை ஆணையர் அலுவலகம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் லால்குடி மாநில வரி அலுவலர் அலுவலகக் கட்டடம் ஆகிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
[7/9, 4:41 PM] VT Vijay: *வணிகவரித் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு*
69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
கைத்தறி பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து அதை
0 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே 39 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்
[7/9, 4:52 PM] VT Vijay: ஜி.எஸ்.டி.,யால் வணிகர்கள் எந்த பாதிப்பும் இல்லை எனவும், ஜி.எஸ்.டி.,யை சிறப்பாக கையாளும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மானிய கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், பா.ஜ.க., தேர்தல் அறிக்கையில் ஜி.எஸ்.டி.,யில் மறுசீரமைப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் குறைகளோடு தான் இருக்கிறது.
ஜி.எஸ்.டி.,யால் வணிகர்கள் வாழ்வாரத்தை, வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளதாக பேசினார். இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, அதிகப்படியான வருவாய் ஈட்டும் விதமாக ஜி.எஸ்.டி., அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிறு வணிகர்கள் சுபிக்ஷமாக வியாபாரத்தை செய்து வருகின்றனர் என்றார்.
ஆரம்பத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் வணிகர்களுக்கு இருந்ததாகவும், ஆனால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
[7/9, 5:23 PM] sathyamoorthy rep: எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்டப்பேரவை வருகை.
[7/9, 5:51 PM] VT Vijay: பத்திரபதிவு மூலமாக அரசுக்கு கடந்த ஆண்ட 87ஆயிரத்து 905 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டு 73 ஆயிரத்து 148 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதோடு ஒப்பிட்டு பார்க்கையில் 14 ஆயிரத்து 756 கோடி ரூபாய் வரி வருவாய் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[7/9, 6:01 PM] VT Vijay: 4 மணிக்கு கூடும் பேரவை நாளை முதல் 4:30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அறிவிப்பு
Conclusion: