ETV Bharat / state

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்க அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன..!

சென்னை: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான அளவு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

govt-have-made-available-of-medicines-for-aids-patients-said-health-ministry

author img

By

Published : May 27, 2020, 3:28 PM IST

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ''எய்ட்ஸ் நோய் தொற்றுடன் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றுடன் வாழ்பவர்கள் 1800 -419 -1800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உயிர் காக்கும் ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சேவை மற்றும் ஆலோசனைகளை அருகில் உள்ள ஏ.ஆர்.டி உதவி மையங்களில் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் நிலை கூட்டு மருந்துகள் போதிய கையிருப்பு வைக்கப்பட்டு திருநெல்வேலி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள ஏ.ஆர்.டி மையங்களில் தங்கு தடையின்றி கிடைக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

45 நாட்களில், 92 சதவீகித எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோய் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு மூன்று மாதத்திற்கான கூட்டு மருந்து முன்னதாகவே வழங்கப்பட்டது. எஞ்சிய நபர்களுக்கும் கூட்டு மருந்துகள் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேவைப்படும் நபர்களுக்கு ஆலோசகர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் மூலமாக உயிர் காக்கும் கூட்டு மருந்தினை அவர்களின் இருப்பிடத்திலேயே வழங்கப்படுகிறது.

90க்கும் மேற்பட்ட அரசு ரத்த வங்கிகளின் மூலம், 28,349 தன்னார்வ ரத்த கொடையாளர்கள் பதிவுசெய்து அதன் மூலம் 147 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 28,340 யுனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. கரோனா நோய் தொற்று பேரிடர் காலங்களிலும் ரத்தவங்கி சேவை தங்கு தடையின்றி பராமரிக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகுகள் பிற ஒத்த கருத்துள்ள சமூகம் சார்ந்த மற்றும் தன்னார்வ அமைப்புகள், எச்.ஐ.வி தொற்றுள்ளோர் கூட்டமைப்புகளுடன் இணைந்து எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெட்டகங்களும் வழங்கப்படுகின்றன.

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களில் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்த நிலையில், அவர்கள் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனிமைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் - பினராயி அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.