இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் மிலாத்-உன்-நபி திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான சந்தர்ப்பத்தில், இஸ்லாமியச் சகோதர- சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முகமது நபி ஒழுக்கம், இரக்கம், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் தொண்டு போன்ற உயர்ந்த மனித மதிப்பீடுகளுடன் நின்றார்.
அவர் மனிதகுலத்திற்கு நீதியின் மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையைக் காட்டினார். அனைவருக்கும் இரக்கத்தையும், கருணையையும் போதித்த நபியின் கொள்கைகளால் நம் வாழ்க்கை ஒளிரட்டும்.
இந்த நாள் சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். நாம் அனைவரும், இந்த நாளில், அன்பை வளர்ப்பதற்கும் சமூகத்தில் அமைதியை வளர்ப்பதற்கும் பாடுபடுவோம்" எனக் கூறியுள்ளார்.