ETV Bharat / state

ஒப்பந்த செவிலியர்களை தற்காலிக பணியாளர்களாக அரசே மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது - செவிலியர்கள் சங்கம்

திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பின் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக தற்காலிக பணியாளர்களாக மாற்ற முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த செவிலியர்களை தற்காலிக பணியாளர்களாக அரசே மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது

author img

By

Published : Jan 14, 2023, 8:12 AM IST

சென்னை: தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 2015ஆம் ஆண்டு முதல் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் செவிலியர்கள் தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்தப்பட்டனர்.

இரண்டு வருடங்களுக்குப் பின் தமிழ்நாடு அரசில் நிரந்தர பணியிடங்கள் காலியாகும் போது அதில் ஈர்க்கப்பட்டு காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று அதிகரித்த போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இட ஒதுக்கீடு அடிப்படையில் சுமார் 5,500 செவிலியர்களுக்கு மூன்று நாட்களில் பணியில் சேர்வதற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிய நேரத்தில், மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் 2,400 செவிலியர்கள் மட்டுமே தங்கள் உயிரை துச்சம் என மதித்து போக்குவரத்து வசதி கூட இல்லாத நேரத்தில் மூன்று நாட்களுக்குள் பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து பணியில் சேர்ந்தனர். இரண்டரை ஆண்டுகள் பணி முடித்த நிலையில் 2022 டிசம்பர் 31ஆம் தேதி அன்று ஆறு மாத ஊதிய நிலுவையுடன் பணியில் இருந்து விடுவிப்பதாக அரசு அறிவித்தது.

இந்தப் பணி நீக்க உத்தரவை கைவிடக் கோரி செவிலியர்கள் கடந்த 12 நாட்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்திருந்தார். ஆனால், அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீடு பின்பற்றி தான் பணியமத்தப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய 3,200 காலி பணியிடங்கள் இருந்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்தப் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத 11 மாத தற்காலிக பணியிடங்களில் பணி அமர்த்துவதாக தெரிவித்திருந்தார்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணி அமர்த்தப்பட வேண்டிய பணியிடங்கள் தற்போது மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணி அமர்த்த விண்ணப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன. திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பின் முறையான பணிநியமனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக அவர்களை முறையற்ற, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத சமூக நீதிக்கு எதிரான தற்காலிக பணியிடங்களாக மாற்றி அதில் அவர்களை பணியமர்த்த அரசே முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

திமுக ஆட்சி அமைந்த பின் துறையில் பணியிட மாறுதல்கள் வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஊழியர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுள்ள நிலையில், இதுபோன்ற முறையற்ற சமூக நீதிக்கு எதிரான பணி மூலம் முறைகேடுகளும், பாரபட்சங்களுக்கும் வழி வகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்கள் உரிமை மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுக ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் அரசின் நற்பெயரை கெடுக்கும் விதமாக அமையும் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு உண்மை நிலை அறிந்து எந்த செவிலியரும் பாதிக்கப்படாத விதத்தில் முறையான பணி அமர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.