ETV Bharat / state

வேதா இல்ல வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றப்பட்ட வேதா நிலைய கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்காத தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

vedha
vedha
author img

By

Published : Jan 28, 2021, 1:31 PM IST

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கி, அதை நினைவில்லமாக தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. அதன் திறப்புவிழா இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.

இந்நிலையில், வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு 69 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நேற்று (ஜனவரி 27) தனி நீதிபதி என்.சேஷசாயி விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அதில், நினைவில்லம் திறப்பு விழாவை நடத்த அனுமதி அளித்து, இதற்காக அப்பகுதியில் பேனர்கள் வைக்கக்கூடாது என உத்தரவும் பிறப்பித்திருந்தார்.

அதேசமயம் வேதா நிலைய வளாகத்தின் நுழைவு வாயிலை திறந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்றாலும் வேதா நிலைய பிரதான கட்டடத்தை திறக்க கூடாது, ஜெயலலிதாவின் உடமைகள் முறையாக கணக்கெடுக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க கூடாது, நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாவியை தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

வேதா நிலைய பிரதான கட்டடத்தில் அனுமதிக்காதது உள்ளிட்ட இரண்டாம் பகுதி உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நேற்றிரவு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் காணொலி மூலமாக ஆஜராகி கோரிக்கை வைத்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும், அதேசமயம் மேல்முறையீடு வழக்கை நாளை (ஜனவரி 29) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.