ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை - ரூ.5 லட்சம் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு - ரூபாய் 5 லட்சம் வழங்க உத்தரவு

State Human Rights commission: அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

HRC Orders
HRC Orders
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 6:44 PM IST

சென்னை: அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த கோகிலா, மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில், "கடந்த 2019ஆம் ஆண்டு பிரசவத்துக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பின் போது சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தையல் முறையாக போடாததால் தொடர்ந்து உடல் உபாதையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே, தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், 2020ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் மனுதாரர் புகார் அளித்த நிலையில் ஓராண்டு 7 மாதங்கள் கழித்து மனுதாரரின் மருத்துவ ரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. பிரசவத்தின் போது மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் மிக சிக்கலான பிரச்சினையை மனுதாரர் சந்தித்து உள்ளார்.

மனுதாரரின் மருத்துவ பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காதது மத்திய அரசின் மருத்துவ வழிகாட்டுதல் விதிகளுக்கு முரணானது.

கரோனா காலம் என்பதால் மனுதாரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காதது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அவ்வப்போது தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.