ETV Bharat / state

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ! - Pongal gift token

Pongal Gift Token: பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன் பெற தவறியவர்கள் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடையில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Government announcement about Pongal gift for non-token recipients
டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு குறித்து அரசு அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 12:53 PM IST

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் முன்பு அறிவித்திருந்தது.

அதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

இதை அடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்ட நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று (ஜன.10) அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: 1,00,008 வடைமாலையில் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்!

அந்த வகையில், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்காக கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டன. மேலும், நேற்று (ஜன.10) முதல் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வரை டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பொங்கல் தொகுப்பை 13ஆம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14ஆம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டோக்கன்கள் கிடைக்கப் பெறாத அரசி குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகையை ஜனவரி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சென்னை புத்தகக் கண்காட்சி.. வாசகர்களை கவரும் புதிய அரங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.