சென்னை அரும்பாக்கம் ஷெனாய் நகர் அருகே ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (29) நீச்சல் வீரர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு நடந்த ஆசிய நீச்சல் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
![பாலகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190515-wa00061557899526700-18_1505email_1557899537_1075.jpg)
தற்போது, அமெரிக்காவில் பணிபுரிந்துவந்த பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். நேற்று இரவு தனது உறவினரை பார்த்துவிட்டு, அரும்பாக்கம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது கலவை ஏற்றிச் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார்.
![பாலகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190515-wa00091557899526701-5_1505email_1557899537_312.jpg)
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
![பாலகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190515-wa00101557899526699-70_1505email_1557899537_0.jpg)
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், இறந்துபோன பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
![பாலகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190515-wa00071557899526701-89_1505email_1557899537_699.jpg)
இதையடுத்து, விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் சுப்பிரமணி என்பவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
மேலும், ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சாலை விபத்தில் இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![பாலகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190515-wa00061557899526700-18_1505email_1557899537_1075.jpg)