சென்னைக்கு துபாய், அபுதாபி நாடுகளிலிருந்து கடந்த 2 தினங்களில் இருவேறு விமானங்களில் கடத்தி வந்த ரூ.3.24 கோடி மதிப்புடைய 7.29 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், 8 பயணிகளை இதுகுறித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து, சென்னை வந்த எத்தியாடு ஏர்லைன்ஸ் பயணிகள் விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் வழக்கம்போல் சோதனையிட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்களுடைய டிராலி டைப் சூட் கேஸ்ஸின் ரப்பர் பீல்டிங்கை பிரித்து பார்த்தனர். அதனுள், தங்க ஸ்ப்ரிங் சுருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேர் சூட்கேஸ்களில் இருந்து 2 கிலோ 22 கிராம் தங்க ஸ்பிரிங்கை கைப்பற்றினார். அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதைபோல், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 6 பயணிகளின் டிராலி டைப் சூட் கேஸ்களுக்குள் இருந்த 2.34 கோடி மதிப்புடைய 5.267 கிலோ தங்க ஸ்பிரிங்குகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், 6 பேரையும் கைது செய்தனர். இவ்வாறு தங்கத்தை, அபுதாபி, துபாயில் நாடுகளில் இருந்து சூட்கேஸ்களுக்குள் நூதனமான முறையில், மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.3.24 கோடி மதிப்புடைய 7.290 தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பசை வடிவில் தங்கம்.. விமான நிலைய அதிகாரிகள் ஷாக்!