ETV Bharat / state

காதலித்து ரூ.68 லட்சம் ரூபாய் சுருட்டல் - இன்னொரு பெண்ணை மணம்முடிக்கத் தயாரான காதலன் மீது புகார் - காதலித்து ஏமாற்றிய காதலன் மீது

காதலித்து ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடி செய்த காதலன் மீது காதலி புகார் அளித்த நிலையில் இது குறித்து காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 3, 2023, 4:23 PM IST

Updated : Mar 3, 2023, 5:55 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்

சென்னை: காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.68 லட்சம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ள காதலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சென்று புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ஆண் நன்பருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் தன்னை காதலிப்பதாகக் கூறினார்.

இருவரும் படிக்கும்போது காதலித்து வந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் போதும் காதல் தொடர்ந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பலமுறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். தனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில், காதலன் சிறுக சிறுக ரூ.68 லட்சம் பணத்தைப் பெற்று கொண்டதாகவும்; தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தான் பலமுறை கூறியும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார்.

பின்னர் விசாரித்தபோது அவர் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கியப்பொறுப்பில் உள்ள நபரின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறார். தன்னை காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு, தன்னிடமிருந்து ரூ.68 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நாளை தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் தனது காதலன் திருமணத்தை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதலி அளித்தப் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் கூறுகையில், "சிறு வயதில் இருந்து காதலிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக காதலன் கூறி வருகிறார். மேலும், பல முறை பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்துள்ளார்.

இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரே காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், இது வரை காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஒரு நிலை வேறொரு பெண்ணிற்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கில் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெண்டர் ஒதுக்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் - பாஜக எம்எல்ஏ மகன் கைது!

Last Updated : Mar 3, 2023, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.