சென்னை: அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி (23). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து சென்னை பெல் கம்பெனியில் தொழில் பழகுநர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்த போது அவருடன் படித்த பாலாஜி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பாலாஜி என்பவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை கேள்விப்பட்ட வினோதினி, டெட்டால் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட அவரின் பெற்றோர் வினோதினியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வினோதினி பெற்றோர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் டூ ஈரோடு: ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா