ETV Bharat / state

அரசு பள்ளியில் இடம் கிடைப்பது சவால்: அமைச்சர் பொன்முடி கூறிய காரணம்? - 643 crore fund for Sanskrit Hindi development

புதுமைப் பெண் திட்டத்தால் தற்போது அரசு பள்ளியில் இடம் கிடைப்பதே சவாலாக உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் இடம் கிடைப்பது சவால்: அமைச்சர் பொன்முடி கூறிய காரணம்?

author img

By

Published : Nov 10, 2022, 5:36 PM IST

Updated : Nov 10, 2022, 8:50 PM IST

சென்னை: 'புதுமைப் பெண்' திட்டத்தின் மூலம் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுவதால் கல்லூரிகளில் இடம் கிடைப்பதே சவாலாக இருக்கிறது எனவும், சமஸ்கிருதம் , இந்திக்காக 643 கோடி செலவு செய்துள்ள ஒன்றிய அரசு தமிழின் வளர்ச்சிக்காக 23 கோடி தான் செலவு செய்துள்ளது எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 17 வது பட்டம் வழங்கும் விழா கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் இணை வேந்தருமான பொன்முடி பேசும்போது, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் 2020 மற்றும் 2021 ம் கல்வியாண்டில் முடித்தவர்களுக்கான பட்டம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஜூலை மாதம் 22 ந் தேதி நடைபெற்றது. பட்டம் வழங்கும் விழாவில் 10 ஆயிரத்து 67 பேர் பட்டங்களை பெறுகிறன்றனர். அவர்களில் 3,968 மாணவிகளும், 6099 மாணவர்களும் பட்டங்களை பெறுகின்றனர்.

ஒரு காலத்தில் பெண்கள் உயர் நிலைக் கல்வி பயிலாத காலமாக இருந்தது. பதக்கம் பெற்ற 283 பேரில் 117 ஆண்கள், 166 பெண்கள் பட்டங்களை பெறுகின்றனர், இதுதான் திராவிட மாடல். தமிழகத்தின் 'சமூக வரலாறை' இங்குள்ள பெறியியல் மாணவர்கள் அறிந்து கொள்வது முக்கியம். கலை, அறிவியல் மட்டுமின்றி பொறியியல் பயில்வோரும் ( inter disciplinary ) வரலாறு பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பொறியியல் பட்டங்களை பெற்ற மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும் என்பதே முதல்வரின் 'நான் முதல்வன்' திட்டம். நான் முதல்வன் என்றால் எல்லோரும் முதலமைச்சர் (chief minister) என்பதில்லை, எந்த துறையில் இருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டம்.

படிக்கும் போதே மாணவர்களுக்கு உன்னதமாக நோக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் பெரிய தொழிற்சாலைகளைத் தான் உருவாக்க வேண்டும் என்றில்லை. குறு, சிறு நிறுவனங்களை உருவாக்கி பலருக்கு வேலை கொடுக்கலாம். மாணவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் சமுதாயத்தின் மீது உணர்வு இருக்க வேண்டும்.

தமிழிழ் பேசினால்தான் மாணவர்களுக்கு புரிகிறது எனவேதான் நான் பேசும்போது கைதட்டுகின்றீர்கள் ஆனால் ஆங்கிலமும் அவசியம். ஆகையால் இரு மொழிக்கொள்கை நமக்கு போதும். எலிக்கும், பூனைக்கும் தனித்தனியே ஒரு வீட்டில் ஒரு மனிதன் பெரிதும் சிறிதுமாக இரண்டு ஓட்டைகள் போட்டானாம், பூனைக்கான பெரிய ஓட்டையில் சிறிய எலியும் போகும் என்பது அவனுக்கு தெரயவில்லை. பெரிய ஓட்டை என்பது ஆங்கிலம் (international language) ஆனால், சிலர் புகுத்த நினைக்கும் சிறிய ஓட்டை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இந்தி போல தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மாநில மொழிகளும் சிறிய ஓட்டைதான். இந்தியால் எந்த பயனும் இல்லை. மூன்றாவது மொழியை கட்டாயமாக்க கூடாது. அதை விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் படிக்கலாம். ஆனால் தற்போது இரண்டு மொழியை படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

பெறியியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்த பிறகே கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இளங்கலைப் பட்டப்படிப்பான பிஏ, பிஎஸ்சிக்கு கூட நுழைவுத்தேர்வை கொண்டுவர பார்க்கின்றனர். 3, 5, 8ம் வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தினால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும் .

அரசு பள்ளியில் இடம் கிடைப்பது சவால்: அமைச்சர் பொன்முடி கூறிய காரணம்?

புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளியில் பயின்று, உயர்க்கல்வி சேரும் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும், உலகின் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பதால், அரசு பள்ளியில் இப்போது இடம் கிடைப்பதே சவாலாக இருக்கிறது.

மாணவிகளிடம் அவர்களது தாய், முதலமைச்சர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் எனக்கு ஒரு 100 ரூ கொடுவே என்று கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு சமஸ்கிருதம், இந்திக்காக 643 கோடி செலவு செய்துள்ளனர், ஆனால் தமிழுக்காக 23 கோடி தான் செலவு செய்துள்ளனர். எனவே இந்தியாவில் இந்தி படிப்பதை வேண்டாம் என கூறவில்லை. கட்டயாப்படுத்தக்கூடாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நவ.11 திண்டுக்கல் வரும் பிரதமர் மோடி: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

Last Updated : Nov 10, 2022, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.