'கேடி' படம் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானவர், நடிகை தமன்னா. இதனைத்தொடர்ந்து 'கண்டேன் காதலை' படத்தில் சுட்டித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார்.
பின்னர் சுறா, வீரம், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்து, தனது நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
![Genelia husband acted with Tamanna Genelia husband Tamanna Tamanna latest movie netflix originals netflix netflix production plan a plan b plan a plan b movie update தமன்னாவுடன் இணையும் ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தேஷ்முக் தமன்னா பிளான் ஏ பிளான் பி நெட்பிளிக்ஸ் நெட்பிளிக்ஸ் ஒர்ஜினல்ஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12791676_tham.jpg)
'பிளான் ஏ பிளான் பி'
இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பிளான் ஏ பிளான் பி' என்ற படத்தில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிக்கிறார்.
![Genelia husband acted with Tamanna Genelia husband Tamanna Tamanna latest movie netflix originals netflix netflix production plan a plan b plan a plan b movie update தமன்னாவுடன் இணையும் ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தேஷ்முக் தமன்னா பிளான் ஏ பிளான் பி நெட்பிளிக்ஸ் நெட்பிளிக்ஸ் ஒர்ஜினல்ஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12791676_thamanna.jpg)
சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த காமெடி கலந்த ரொமான்ஸ் படத்தில் பூனம் தில்லான், குஷா கபிலா ஆகியோரும் நடிக்கின்றனர்.