ETV Bharat / state

ரூ.2 கோடி மோசடி- பிடிபட்ட கேடி தம்பதியினர்

சென்னையில் ரெடிமேட் ஆடைகள் கொள்முதல் செய்து சுமார் 2 கோடி ரூபாய் வரை பணமோசடி செய்த கணவன் மனைவியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

பிடிப்பட்ட கேடி தம்பதியினர்
பிடிப்பட்ட கேடி தம்பதியினர்
author img

By

Published : Jul 24, 2021, 8:35 AM IST

சென்னை: ராயபுரத்தில் BEE TEE Fabric & Garments என்ற பெயரில் ரெடிமேட் கடை நடத்தி வரும் பிரகாஷிடம், கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியைச் சேர்ந்த செந்தில் (எ) மணிகண்டன் (41), அவரது மனைவி விஜய நிர்மலா (41) ஆகியோர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது தாங்கள் M/s Jeans Brand Factory என்ற பெயரில் பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் ஆகிய இடங்களில் துணி கடைகள் நடத்தி வருவதாகக் கூறி பிரகாஷிடம் தங்கள் கடைகளுக்கு துணிகளை மொத்தமாக விநியோகம் செய்யக் கோரி ஆர்டர் கொடுத்துள்ளனர்.

ரூ.83 லட்சம் சுருட்டல்

அவர்கள் அளித்த ஆர்டரின் அடிப்படையில் பிரகாஷ், 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் ஆடைகளை விநியோகம் செய்துள்ளார். துணிகளை பெற்றுக்கொண்ட மணிகண்டன், விஜய நிர்மலா தம்பதியினர் பிரகாஷுக்கு ஒரு சிறிய தொகையை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 83 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து செந்தில் (எ) மணிகண்டன், அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகார் மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

11 நபர்களிடம் 2 கோடி

விசாரணையில், அத்தம்பதியினர், M/s Jeans Brand Factory என்ற பெயரில் ரெடிமேட் கடை நடத்தி வருவதாகக் கூறி பிரகாஷ் உள்பட 11 நபர்களிடம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜீன்ஸ் மற்றும் ரெடிமேட் ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் கொள்முதல் செய்த ஆடைகளை, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்ததுடன், அதில் ஒரு சிறிய தொகையை மட்டும் ரெடிமேட் ஆடைகளை அனுப்பியவர்களுக்கு கொடுத்துவிட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட தம்பதியினர்

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படைப் காவல் துறையினர் தலைமறைவாக இருந்து வந்த மோசடித் தம்பதிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தம்பதியரின் இருப்பிடம் பற்றி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், செந்தில் (எ) மணிகண்டன், அவரது மனைவி விஜய நிர்மலா இருவரையும், திண்டிவனத்தில் வைத்து நேற்று முந்தினம் (ஜூலை 22) கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மணல் கொள்ளை - திமுக பிரமுகர் உள்பட 4 பேர் தலைமறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.