ETV Bharat / state

சென்னையில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு ரயில் இயக்கம் - ரயில்வே எஸ்பி பொன்ராமு

கோரமண்டல் ரயிலில் சென்ற 4 நபர்களின் உறவினர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளது எனவும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி பொன்ராமு தெரிவித்துள்ளார்.

Railway
கட்டுப்பாட்டு அறை மூலம் விபத்தில் சிக்கியவர்களின் 4 நபரின் உறவினருக்கு தகவல்
author img

By

Published : Jun 3, 2023, 2:28 PM IST

Updated : Jun 3, 2023, 4:01 PM IST

சென்னையில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு ரயில் இயக்கம்

சென்னை: ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து நாட்டையே உலுக்கி வருகிறது. மேலும், அந்த ரயிலில் அதிகளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர் என்ற தகவல் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விபத்தில் சிக்கியவர்களை உறவினர்களால் தொடர்பு கொள்ள இயலாது என்ற காரணத்தால் தமிழ்நாட்டில் 2 கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இது குறித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே எஸ்பி பொன்ராமு கூறுகையில், “ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டி.எஸ்.பி, டி.ஆர்.ஓ உள்ளிட்ட பல அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.

இதுவரை கோரமண்டல் ரயிலில் சென்ற 4 நபர்களின் உறவினர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான தகவல்களையும் அளித்துள்ளோம். தற்போது இந்த கட்டுப்பாட்டு அறையானது ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் அவர்கள் குறித்த தகவலை கேட்டால், அது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்களை வழிநடத்தவும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை பாதுகாப்பாக வழி அனுப்புவதற்காக பாதுகாப்பு பணியில் 100 ரயில்வே போலீசார், 100 ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மற்றும் 20 கமாண்டோ பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று மாலை 7.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு ஒரு ரயில் புறப்படுகிறது. அதில் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த நபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு இலவசமாக செல்லலாம்.

இதேபோல கோரமண்டல் ரயிலில் சென்று பாதிக்கப்பட்ட 250 பேர் நாளை காலை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. பயணித்த நபர்களின் செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்டு வருகின்றோம்.

இதுவரை கிடைத்த தகவலில் 132 பேர் ரிசர்வேஷன் பெட்டியில் சென்றதாகவும், இதுவரை 100 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் உள்ள 32 நபர்கள் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. பொதுவாக ஸ்லீப்பர் பெட்டிகளை விட முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலேயே அதிக நபர் பயணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் நாளை காலை விபத்தில் இருந்து தப்பியவர்களை அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசே கொண்டு சேர்க்கும். தற்போது விபத்து நடந்த இடத்திற்கு உயர் அதிகாரிகள் நேரில் சென்றுள்ளனர். வேறு ஏதேனும் மீட்புப்பணிகள் தேவைப்பட்டால் அது உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Odisha train accident: ஒடிசாவின் மீண்டும் ஒரு 'கருப்பு வெள்ளி'.. வரலாற்றில் 2வது முறையாக நிகழ்ந்த கோர விபத்து

Last Updated : Jun 3, 2023, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.