ETV Bharat / state

ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாள்கள் காவலில் விசாரிக்க மனு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கேட்டு தண்டையார்பேட்டை காவல் துறையினர் தொடர்ந்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.

நீதிமன்றம் விசாரணை
நீதிமன்றம் விசாரணை
author img

By

Published : Feb 25, 2022, 5:31 PM IST

சென்னை: திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கித் தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை ஐந்து நாள்கள் காவல் கேட்டு தண்டையார்பேட்டை காவல் துறையினர் ஜார்ஜ் டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 25) 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாரை காவல் துறையினர் பலத்த பாதுகாப்போடு அழைத்துவந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.

அப்போது, ஜெயக்குமார் தரப்பில் அரசு தலைமை முன்னாள் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆஜரானார். காவல் துறைத் தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரியதர்ஷினி ஆஜரானார். ஜெயக்குமார் பதிவிட்ட காணொலி குறித்து ஆய்வுசெய்து விசாரிக்க வேண்டும். அதற்காக போலீஸ் காவல் வழங்க வேண்டும் எனக் காவல் துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் சிசிடிவி ஆவணங்களையும் சேகரித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், திமுக பிரமுகரைத் தாக்கிய சமூக வலைதளத்தில் காணொலியைப் பதிவேற்றம் செய்த நபர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக காவல் வழங்க வேண்டும் என்று வாதத்தை காவல் துறை தரப்பில் தொடர்ந்து முன்வைக்கின்றனர்.

நந்தினி சத்பதி வழக்கு, பிரியதர்சினி வழக்கு, அம்புஜா குல்கர்னி வழக்கு போன்ற வழக்குகளைக் காவல் துறை தரப்பில் மேற்கோள்காட்டி காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைத் தரப்பில் கேட்கப்பட்டது.

ஜெயக்குமார் தரப்பில் வைக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் 420 மோசடி தொடர்பான வழக்குகள், ஆவண வழக்கு நிலமோசடி வழக்கு ஆகியவை தொடர்பானவை குற்றவியல் வழக்கு தொடர்பாகத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டவில்லை என்று காவல் துறைத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாதிட்ட ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ. நடராஜன், ஜெயக்குமாரை சிறையில் சென்று காவல் துறை விசாரிக்கலாம், போலீஸ் காவல் தரக்கூடிய அளவுக்கு இந்த வழக்கு உகந்தது அல்ல என்றும், கள்ள ஓட்டு போட்டவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார் ஜெயக்குமார். எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் வழக்கறிஞர் ஏ. நடராஜன் கூறினார்.

நீதிமன்றம் விசாரணை

அரசியல் பழிவாங்க போடப்பட்ட வழக்கு இது என்றும், பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி காவல் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்றும் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். இதற்கிடையில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் தொடர்பான காணொலி மடிக்கணினியில் நீதிபதியிடம், ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் காண்பித்து தங்களது தரப்பு வாதத்தைப் பேசினர்.

இதனால், காவல் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி முரளி கிருஷ்ண ஆனந்த், போலீஸ் காவலில் ஜெயக்குமாரை அனுப்ப இயலாது எனக் கூறி போலீஸ் காவல் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜெயக்குமார் கைது முதல் ஜாமீன் மனு தள்ளுபடி வரை: விவரம் உள்ளே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.