ETV Bharat / state

முன்னாள் திமுக அமைச்சரின் சகோதரர் மீது நிலஅபகரிப்பு குற்றச்சாட்டு - காவல் ஆணையரிடம் புகார்!

150 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை முன்னாள் திமுக அமைச்சரின் சகோதரர் அபகரித்து விட்டதாக ஓய்வுபெற்ற தாசில்தார், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நில அபகரிப்பு செய்த முன்னாள் திமுக அமைச்சரின் சகோதரர் - காவல் ஆய்வாளர் மிரட்டல்.. காவல் ஆணையரிடம் புகார்!

author img

By

Published : Aug 2, 2022, 10:22 AM IST

சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தாசில்தாரரான திருநாவுக்கரசு (75). இவருக்கு கொரட்டூர் கிராமத்தில் சொந்தமாக 150 கோடி ரூபாய் மதிப்பில் 14.5 ஏக்கரில் நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் அபகரித்துக் கொண்டு மிரட்டுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநாவுக்கரசு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசு, “சென்னை கொரட்டூரில் 1989 ஆம் ஆண்டு முதல் தனக்கு சொந்தமாக 14.5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை 55 லட்சம் ரூபாய் கொடுத்து பெற்று கொள்வதாக முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் என்னை தொடர்பு கொண்டார்.

முன்னாள் திமுக அமைச்சரின் சகோதரர் மீது நிலஅபகரிப்பு குற்றச்சாட்டு

இதற்கு முன்பணமாக ரூ.15 லட்சம் கொடுத்து ‘பவர் ஆப் அட்டார்னி’ பெற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகை தராமல் என்னை ஏமாற்றினார். பின்னர் தேவராஜ் பொய்யான ஆவணங்களை தயார் செய்து, என்னுடைய 14.5 ஏக்கர் நிலத்தை அபகரித்து கொண்டார். இது குறித்து அப்போதைய சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில், ஆணையர் விசாரணை செய்து தேவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தேவராஜ், தன் மீது பதியப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் மூலம் ரத்து செய்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன். அந்த மனு மீதான விசாரணை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, தேவராஜ் தூண்டுதலின் பேரில் நேற்று முன்தினம் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து, ‘இந்த இடம் தேவராஜூக்கு சொந்தமான இடம்’ எனக்கூறி காவலாளியை மிரட்டி அடித்து துரத்தி விட்டார்.

மேலும் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நிலத்தை தேவராஜ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், , பிரச்சனை செய்தால் கைது செய்து விடுவேன் என மிரட்டிச் சென்றார். எனவே, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த தேவராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கச்சநத்தம் படுகொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள் - சிவகங்கை நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.