காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் கோயிலின் சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்ததாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சென்னை அண்ணாநகர் நெற்குன்றத்தில் வீரசண்முகமணியை கைது செய்தனர்.
இதனிடையே கைதாகியுள்ள வீரசண்முகமணியிடம் சிலை கடத்தல் சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வீரசண்முகமணியை கும்பகோணம் அழைத்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.