ETV Bharat / state

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆராயும் ஆணையத்தின் முதல் கூட்டம்! - அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று (ஜுன் 18) நடைபெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆராயும் ஆணையத்தின் முதல் கூட்டம்!

author img

By

Published : Jun 18, 2021, 10:14 AM IST

Updated : Jun 18, 2021, 10:29 AM IST

2020-2021ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள், முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரி ஆகியவைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜுன் 15 ஆம் தேதி, மாணவர் சேர்க்கை குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆராய ஆணையம்;

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக உயர் கல்வித் துறை, கால்நடை மற்றும் மீன்வள துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, சட்டத்துறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநரையும் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்து அரசு அறிவித்துள்ளது.

தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் ஆணையத்தின் தலைவர் டெல்லி உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் இன்று (ஜுன் 18) தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்

Last Updated : Jun 18, 2021, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.