சென்னை: கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட 4 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி பரவிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
மருத்துவமனை ஊழியர்கள் அறையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், ஊழியர்கள் அறையில் இருந்த சில பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்!