ETV Bharat / state

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் - அபராதம் விதித்த வட்டார போக்குவரத்து அலுவலர் - சென்னை மாவட்ட செய்திகள்

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Omni buses
ஆம்னி பேருந்துகள்
author img

By

Published : May 9, 2021, 3:58 PM IST

Updated : May 9, 2021, 4:18 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால் நாளை (மே.10) முதல் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் படையெடுத்து வருகின்றனர். போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிலர் ஆம்னி பேருந்துகளில் செல்கின்றனர்.

இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன்பேரில் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் அலுவலர்களுடன் சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், உரிய ஆவணமின்றி 40 பயணிகளுடன் வந்த ஆம்னி பேருந்தை ஜப்தி செய்து பயணிகளை மாற்று பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

அதே போல் அதிக கட்டணம் வசூலித்த 6 ஆம்னி பேருந்துகளுக்கு தலா 50,000 ரூபாய்வரை அபராதம் விதிக்கப்பட்டது

இதையும் படிங்க: பெரியப்பா கருணாநிதி, அப்பா சிவாஜியின் ஆசி ஸ்டாலினுக்கு உண்டு'

Last Updated : May 9, 2021, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.