சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதில், கடந்த 12 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும் , டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றும் (ஜூன் 3) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
மேலும், சமையல் சிலிண்டர் விலை மே 7ஆம் தேதி ரூ.50 உயர்ந்த நிலையில், மே19ஆம் தேதி மீண்டும் சமையல் எரிவாயு விலை ரூ.3 உயர்ந்தது. அதே சமயம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் 135 ரூபாயை மத்திய அரசு நேற்று முன்தினம் (ஜூன் 1) குறைத்திருந்தது.
- டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72க்கும், டீசல் ரூ.89.62க்கும் விற்பனையாகிறது.
- மும்பையில் பெட்ரோல் ரூ.111.35க்கும், டீசல் ரூ.97.28க்கும் விற்பனையாகிறது.
- கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.106.03க்கும், டீசல் ரூ.92.76க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் - அரை சதம் அடித்தது தக்காளி விலை!