சென்னை: எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, சனாதனம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்று கொள்கிறோம். அப்படி இருக்கும்போது, என்ன தான் கொள்கை இருந்தாலும், ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை என கூறினார்.
மேலும், மேடையில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னால், அது மிக பெரிய தவறு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது சரியானதாக இருக்காது. சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு என்று கூறவில்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார்கள். அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கின்றார். அமைச்சராக இருப்பவர் பொறுப்போடு பேச வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: Locanto app cheating: வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் லோகாண்டோ.. போலீஸ் எச்சரிக்கை!
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், சனாதனத்தில் வன்முறைக்கு இடமில்லை. ராமருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தியதை பார்த்து வளர்ந்தவள் நான். ஆனால், அவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்தியும் வன்முறையை வெளிப்படுத்தாத மதம் தான் இந்து மதம். அதே நேரம் இவர்கள் இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றார்.
-
Glimpses from the '90th Year Valedictory Celebrations' event of The Society of Auditors which Smt @nsitharaman attended today in Chennai, Tamil Nadu. https://t.co/yKcbMwF1tx pic.twitter.com/ovAX2iouMW
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Glimpses from the '90th Year Valedictory Celebrations' event of The Society of Auditors which Smt @nsitharaman attended today in Chennai, Tamil Nadu. https://t.co/yKcbMwF1tx pic.twitter.com/ovAX2iouMW
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 16, 2023Glimpses from the '90th Year Valedictory Celebrations' event of The Society of Auditors which Smt @nsitharaman attended today in Chennai, Tamil Nadu. https://t.co/yKcbMwF1tx pic.twitter.com/ovAX2iouMW
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 16, 2023
மேலும், தணிக்கை துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறம்பட செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி வருகிறோம்.
தொடர்ந்து, தேர்தலுக்காக சனாதன எதிர்ப்பு கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோயிலின் உண்டியல் பணம் மட்டும் தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு வேண்டுமா?” இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: ஒன்பது மாதங்களில் 4,000 பேர் டெங்குவால் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!