ETV Bharat / state

விழா மேடையில் கதறி‌ அழுத 'தலைநகரம் 2' பட இயக்குநர்! - நடிகை ஆயிரா

'தலைநகரம் 2' படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

மேடையில் கதறி‌அழுத தலைநகரம் 2 இயக்குனர்!

author img

By

Published : Jun 27, 2023, 9:22 PM IST

சென்னை: ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V.Z.துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 23-ஆம் தேதி வெளியானது. இதில், சுந்தர் சி, பாலக் லால்வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, "வழக்கமாக இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும், ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். இந்தப்படத்தை 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்போவதாக துரை கூறிய போது நான் பயந்துவிட்டேன்.

ஏனெனில், இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி 'தலைநகரம் 2' திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் படம். ஒவ்வொரு ஆக்சனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும். நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் படத்தை பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள்” என கூறினார். இந்தப்படத்தின் வெற்றிக்கு இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே சாட்சி என கூறிய அவர் இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய நடிகை ஆயிரா ”இது தனக்கு மிகவும் சந்தோஷமான தருணம் எனவும், தனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V.Z.துரைக்கு நன்றி கூறினார். தான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா என பயந்ததாகவும், ஆனால் இயக்குநர் துரை ஊக்கம் தந்து செய்ய வைத்ததாகவும் கூறினார். மேலும், தனக்கு சுந்தர் சி மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறி இந்தப்படத்திற்கு மக்கள் தந்த ஆதரவிற்கு" நன்றி தெரிவித்தார்.

பின்னர், இயக்குநர் V.Z.துரை பேசிகையில், "தலைநகரம் 2 எடுக்க ஆரம்பித்ததிலிருந்தே 'தலைநகரம் 1' பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது மிகப்பெரிய வெற்றிப்படம். வடிவேலு சார் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்த படத்தில் காமெடியே இல்லை. ஏன் இந்தப்படம் எடுத்தேன் என்றால், இந்தக்கதை ஒரு எக்ஸ் ரௌடி பற்றியது. அதற்கு ஏற்கனவே ரௌடியாக நடித்து ஃபேமஸான ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

சுந்தர் சார் ஏற்கனவே தலைநகரம் பண்ணியிருந்ததால் அவரை வைத்து கதை செய்யலாம் என அவரிடம் கேட்டேன், எந்த தயக்கமும் இல்லாமல் உடனே செய்யுங்கள் என்றார். எங்களுக்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் டைட்டில் தந்தார். இப்போது படம் பார்த்த மக்கள் தலைநகரம் முதல் பாகத்தை விட நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்தப்படத்திற்கு காமெடி தேவையில்லை என்று அவர்களே சொல்வது மகிழ்ச்சி” என கூறினார்.

“இந்தப்படத்திற்கு 300 தியேட்டர்களா? என கேள்வி எழுந்தது, ஆனால் இப்போது 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நிறைய தியேட்டரில் படத்தைக் கேட்டு வாங்கி ஓட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமாக இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. உங்கள் விமர்சனம் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளது” எனவும் கூறினார்.

இப்படத்தின் தயாரிப்பாளரான பிரபாகரனுக்கு நன்றி கூறிய அவர், தனது எல்லா துக்கத்தையும் தன் நண்பர் மற்றும் இணை தயாரிப்பாளர் மதுவிடம் தான் பகிர்ந்து கொள்வதாகவும் கூறி அவருக்கும் நன்றி தெரிவித்து மேடையிலேயே கதறி அழுத அவரை அவரது நண்பர் மதுராஜ் தேற்றினார்.

இதையும் படிங்கள்: விஜய்யுடன் இணைகிறாரா வெற்றிமாறன்? இயக்குநர் வெற்றிமாறன் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.