ETV Bharat / state

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே மோதல் - இருவருக்கு அரிவாள் வெட்டு! - ப்ரீபெய்ட் ஆட்டோ ஸ்டாண்ட்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai
author img

By

Published : Oct 25, 2019, 3:39 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ப்ரீபெய்ட் ஆட்டோ ஸ்டாண்ட், வால்டாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளன. இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சென்ட்ரல் ரயில் பயணிகளிடம் முன்பணம் பெற்று ஆட்டோவை வாடைக்கு எடுத்து செல்வார்கள்.

இந்த இரண்டு ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. ப்ரீபெய்ட் ஸ்டாண்ட் ஆட்டோக்களால் தங்கள் தொழில் பாதிப்படுவதாக கூறி நேற்றிரவு வால்டாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த ராஜேஷ், சரவணன், ஜார்ஜ், அமுல் உள்ளிட்ட ஐந்து பேர் ப்ரீபெய்ட் ஆட்டோ பூத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தட்டிகேட்ட ப்ரீபெய்ட் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த சோமு, ராஜா இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். காயமடைந்த இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பெரியமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மது அருந்தி கொண்டிருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

Intro:Body:ஆட்டோ சவாரி தொழில் போட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருவருக்கு அறிவால் வெட்டு.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. ரயில் பயணிகள் முன்பணம் செலுத்தி ஆட்டோவை வாடைக்கு எடுத்து செல்வார்கள், அதேபோல அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது.

ப்ரீபெய்ட் ஆட்டோவால் தங்கள் தொழில் பாதிப்படுவதாக கூறி நேற்று வால்டாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த ராஜேஷ்,சரவணன்,ஜார்ஜ்,அமுல் உள்ளிட்ட 5 பேர் நேற்று இரவு குடிபோதையில் சென்ட்ரல் ப்ரீபெய்ட் ஆட்டோ பூத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தட்டிகேட்ட ப்ரீபெய்ட் ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த சோமு மற்றும் ராஜா என்கிற இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

இதுகுறித்து பெரியமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயம்பட்ட இருவரும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் இருவரும் உடன் பிறந்த் சகோதரர்கள் என்பது குறிப்பிடதக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.