ETV Bharat / state

சென்னையில் இன்று மட்டும் 50% தள்ளுபடி விலையில் பட்டாசுகள்

சென்னை தீவுத்திடலில் விற்பனையாகாமல் உள்ள பட்டாசுகளை 50% தள்ளுபடி விலையில் இன்று ஒரு நாள் மட்டும் விற்பனை செய்ய உள்ளதாக சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 50% தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை - இன்று மட்டும்..

author img

By

Published : Oct 25, 2022, 1:32 PM IST

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் அக். 17ஆம் தேதி முதல் 40க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு சென்னையில் வசிக்கக்கூடிய ஏராளமான மக்கள், கடந்த ஒரு வாரமாகவே பட்டாசுகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.

அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பசுமை பட்டாசுகளையும் மக்கள் விரும்பி வாங்கிச் சென்றுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சென்னை பட்டாசு விற்பனையாளர் சங்கத்தினர் கூறுகையில், “இந்த ஆண்டு விலை சற்று உயர்வாக இருந்தாலும், கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது, பட்டாசு விற்பனை சமமாக உள்ளது.

பசுமை பட்டாசுகள் 40% அளவில் கூடுதல் விலையாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. புஸ்வானம், சங்கு சக்கரங்கள் போன்றவை அதிகளவில் தேக்கமடைந்துள்ளன. இருப்பினும் 80% பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீவுத்திடலில் சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. இன்றைய தினம் (அக் 25) தேக்கமடைந்துள்ள அனைத்து வகையான பட்டாசுகளையும் 50% தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய உள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கழுகுப்பார்வையில் சென்னையின் தீபாவளி கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.