ETV Bharat / state

மெட்ராஸ் ஐஐடி, மும்பை ஐஐடிக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதி வழங்கும் 'FedEx' நிறுவனம்..! - FedEx Express agree with Madras IIT

Madras IIT: தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், மும்பை ஐஐடி மற்றும் மெட்ராஸ் ஐஐடிக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்குவதாக FedEx Express நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மெட்ராஸ் மற்றும் மும்பை ஐஐடி-க்கு 10M டாலர்கள் நிதி அளிக்கும் FedEx நிறுவனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:39 PM IST

சென்னை: உலகின் மிகப்பெரிய அதிவேக டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான FedEx Express (FedEx), இந்திய தொழில்நுட்பக் கழகங்களான மும்பை ஐஐடி, மெட்ராஸ் ஐஐடி ஆகியவற்றிற்கு பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், திறமையைப் பயன்படுத்துதல், நிலைத்தன்மை, தொடக்க நிறுவன வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஃபெட் எக்ஸ்-ன் (FedEx) பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த கூட்டு முயற்சி உறுதிப்படுத்தியுள்ளது. இரு ஐஐடி வளாகங்களிலும் உலகளவில் அங்கீகரிக்கப்படும் உயர் சிறப்பு மையத்திற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைப்பதற்கான முன்முயற்சிக்கு FedEx அதன் பங்களிப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆற்றல்மிக்க திறமையான நபர்களை ஊக்கப்படுத்துவதுடன், ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்துதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு உதவுதல், சுற்றுச்சூழலை தீவிரமாக ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த உயர்சிறப்பு மையம் முன்னிலை வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து FedEx கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜ் சுப்ரமணியம் கூறுகையில், "விநியோக சங்கிலிகளை அனைவருக்கும் உகந்தவகையில் சிறப்புடையதாக மாற்ற, FedEx விரும்புகிறது. போக்குவரத்து சூழலை மாற்றியமைப்பதை கடந்து, நமது சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உறுதி பூண்டிருக்கிறோம். இந்த இலக்குகளை அடையும் வகையில் ஐஐடி நிறுவனங்களுடன் எங்களது ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும்" எனக் கூறினார்.

தொடர்ந்து, மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசுகையில், "தொழில்நுட்பத்தையும், திறமையையும் ஒன்றிணைத்து நீடித்த போக்குவரத்தை இயக்குவதற்கான மையத்தை FedEx உடன் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் நெட்வொர்க் திட்டமிடல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, செயல்திறன் அதிகரிப்பு, மூலோபாயத் திட்டமிடல் (Strategic Planning) மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நீடித்த தளவாடப் போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்த செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

மும்பை ஐஐடி, மெட்ராஸ் ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களுடன் FedEx Express மேற்கொண்டிருக்கும் இந்த கூட்டுமுயற்சியானது, தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் திறமைமிக்க குழுவினரையும் ஒருங்கிணைத்து, போக்குவரத்து தொழில் தரத்தை மறுவரையறை செய்ய தயாராகும் வகையில் அமையவுள்ளது. புதுமை மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவின் தடையற்ற ஒருங்கிணைப்பு மூலம் எல்லைகளைக் கடந்து, போக்குவரத்து சிக்கல்களை சரிசெய்வதில் கவனம் செலுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: விரைவில் திறப்புக்கு தயாரான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. முதற்கட்டமாக 100 பேருந்துகள் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.