சென்னை: சென்னை அடுத்த செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியும் மற்றும் மகளும் வெளியூர் சென்ற நிலையில் தனியாக இருந்த 16 வயது மகளை மது போதையில் பெற்ற தந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதனை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜன.12) சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தாய் மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது பெற்ற தந்தையே இந்தப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தது.
அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று (ஜன.13) கைது செய்தனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் காதல் ஜோடி தற்கொலை