சென்னை வேப்பேரி பகுதியில் ஸ்ரீமகாவீர் சுவாமி ராஜேந்திர சுரி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உள்ளது. இங்கு கடந்த ஒன்றரை வருடமாக ஜெயின் மெஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்கும் போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அக்சய், தீபக்குமார், முகேஷ், சுதாகர் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.