ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதால், அனைத்து ரயில்,பேருந்து நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்க வேண்டும் எனவும், முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்க உத்தரவிடக் கோரியும் கனிமொழி, மதி உள்ளிட்ட எட்டு பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்து ஓராண்டு காலமாகியும் அரசு தரப்பில் பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மனுவுக்கு ஜனவரி 13ஆம் தேதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சமூக நலத்துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜனவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஆதரவற்ற முதியவர் மரணம்: உடலை அடக்கம் செய்த மனிதநேயக் 'காவலர்'