ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

author img

By

Published : Jul 30, 2021, 5:27 PM IST

5pm
5pm

1.'அதிமுக பொதுக்குழு செல்லாது' - சசிகலாவின் வழக்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தொடுத்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

2. தாமிரபரணி ஆற்று மணல் கடத்தல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

திருநெல்வேலி பேருந்து நிலையம் சீர்மிகு நகரம் கட்டுமானத்தின்போது சுமார் 100 கோடி ரூபாய் அளவில் தாமிரபரணி ஆற்று மணல் கடத்தப்பட்ட விவாகரத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணை உத்தரவிடக் கோரிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

3. ஸ்டாலின் தலைமையில் நிதித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

நிதித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

4. தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

தன்பாத் நீதிபதி ஆட்டோ மோதி உயிரிழந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையில் இறங்கியுள்ளது.

5. பாலியல் புகார்: மணிகண்டனின் மனுவுக்கு நடிகை பதிலளிக்க உத்தரவு

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவுக்குப் பதிலளிக்கும்படி நடிகைக்கு உத்தரவிட்டது.

6. 'காங்கிரஸ் தலைவர்கள் பற்றி இழிவுப்படுத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை'

சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பற்றியும், கட்சித் தலைவர்களைப் பற்றியும் இழிவுப்படுத்துகிற வகையில் பதிவிடும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

7. இமாச்சலில் நிலச்சரிவு: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை

சிர்மூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 707 முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதில், எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து

9. யுஷ்வேந்திர சஹால், கௌதமுக்கு கரோனா பாதிப்பு!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

10. சர்வதேச விருதுகளை பெற்ற மகாமுனி!

ஆர்யா நடிப்பில் வெளியான 'மகாமுனி' திரைப்படம் மூன்று சர்வதேச விருதுகளை கைப்பற்றியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.