ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச்.2) நடந்து வருகிறது. இதில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பின் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய உடன் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆகவே, 10 மணி நிலவரப்படி திமுக உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அந்த வகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக கூட்டணியான அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 5,598 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 1,479 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் ஆனந்தன் 206 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.