ETV Bharat / state

சென்னை ஐஐடியில் நுழைவுத் தேர்வின்றி பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு!

author img

By

Published : Apr 12, 2022, 8:34 AM IST

Updated : Apr 12, 2022, 12:50 PM IST

சென்னை ஐஐடி வழங்கும் 3 ஆண்டு பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் சேர முன்வர வேண்டும் என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நுழைவுத் தேர்வின்றி பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு
’நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்காது’ - ஐஐடி இயக்குநர் காமகோடி

சென்னை: சென்னை ஐஐடியில் நுழைவுத்தேர்வு இல்லாமல் 3 ஆண்டு பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் சேர முன்வர வேண்டும் எனவும், பொதுவாக கல்வியில் நுழைவுத்தேர்வுக் கூடாது எனவும், நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்காது என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

ஐஐடியின் தகுதித் தேர்வின் தேர்ச்சி மட்டுமே போதுமானது: இதுகுறித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களையும் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் முதல் மற்ற நகரங்கள், கிராமங்கள் வரை பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும், வெவ்வேறு வயது உடையவர்களும், மாறுபட்ட சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்டவர்களும் இந்த பட்டப் படிப்பைப் படித்து வருகின்றனர்.

கல்வி உதவித் தொகை மற்றும் கட்டணச் சலுகை ஆகியவற்றை சென்னை ஐஐடி வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமான மாணவர்களில், 180க்கும் மேற்பட்டோர் 100 சதவீத கல்வி உதவித் தொகையும், 120க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் 50 சதவீத கட்டணச் சலுகையும் பெற்று பயின்று வருகின்றனர்.

வழக்கமாக ஐஐடியில் சேருவதற்கு ஜேஇஇ(JEE) நுழைவுத் தேர்வின் மூலமாகவே சேரமுடியும் முதல்முறையாக ஆன்-லைன் வழியில் கற்பிக்கப்படும் பிஎஸ்சி டேட் ஆஃப் சயின்ஸ் பாடப்பிரிவில் மாணவர்கள் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் . இந்தப் படிப்பில் சேருவதற்கு ஐஐடி நடத்தும் தகுதித் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதுமானது. இந்த தகுதித்தேர்வுக்கு உரிய பயிற்சியும் சென்னை ஐஐடி வழங்குகிறது.

சென்னை ஐஐடியில் நுழைவுத் தேர்வின்றி பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு!

மாணவர்களுக்கு கட்டண சலுகை: இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்பை உருவாக்கும் வகையில், கல்விக்கான தடைகளை நீக்கி தரமான சென்னை ஐஐடி-யின் கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த படிப்பில் சேரக் கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் ஐஐடி சார்பில் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்களுக்கு இலவசமாகவும், 5 லட்ச ரூபாய்க்கு குறைவாக வருவாய் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் பெண் மாணவிகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்தப் படிப்பில் சேருவதற்கு மூன்று முறை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தகுதித்தேர்வு மதிப்பெண் செல்லும். டேட்டா சயின்ஸ் பட்டப் படிப்பை மாணவர்கள் 5 ஆண்டுகளில் முடிக்கலாம் என்கிற வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 1,500 மாணவர்கள் தற்போது இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் ஐஐடி வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பில் மாணவர்களுக்கு தேசியக் கல்விக் கொள்கையின்படி சான்றிதழ், பட்டயம், பட்டம் என 3 நிலையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிஎஸ்சி எஸ் என 3 ஆண்டு பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர கேட் தேர்வினை எழுதி தகுதிப்பெற்றால் எம்டெக் சேர முடியும். பிஎஸ்சி முடித்துவிட்டு எம்எஸ்சி போன்றப் படிப்புகளில் சேர முடியும். அரசுப் பள்ளி மாணவர்களை அதிகளவில் ஐஐடியில் சேர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகிறோம். தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான கட்டணச் சலுகையும் இதற்கு உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “12 ம் வகுப்பு படிப்பவர்கள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்து கொண்டு, பின்னர் வெற்றிகரமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபின் இதில் சேரலாம். பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு ஆகியவற்றை முடித்தவர்களுக்கு நிறுவனங்களில் உள்ளிருப்புப் பயிற்சி அல்லது வேலைவாய்ப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது “ எனக் குறிப்பிட்டார்.

’சென்னை ஐஐடியின் உதவியால் விரும்பியதை படிக்கிறோம்’: இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சரவணப்பிரியா கூறும்போது, ”டேட்டா சயின்ஸ், புரோகிராமிங் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள விரும்பினேன். இத்திட்டம் குறித்துக் கேள்விப்பட்டதும், ஆன்லைனில் அதுபற்றிப் படித்தேன். கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில், ஆரம்பத்தில் நான் இதில் சேர முடியவில்லை. குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்காக சென்னை ஐ.ஐ.டி. உதவித் தொகை வழங்கி வருவதால், இப்பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பைத் தொடரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. எம்எஸ்சி சென்னை பல்கலைக் கழகத்தில் படித்து வரும் போதே, இந்தப்பாடப்பிரிவினையும் படித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

மதுரையை சேர்ந்த மாணவி புவனேஸ்வரி கூறும்போது, ”ஐஐடியில் படிக்க வேண்டும் என்பதற்கான ஜெஇஇ(JEE) நுழைவுத்தேர்வினை எழுதினேன். அதில் தகுதிப்பெற்று சேர்வதில் சிரமம் இருந்தது. ஐஐடியில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தேன். தகுதித்தேர்வினை எழுதவும் வழிகாட்டினார்கள். அதனால் தகுதிப்பெற்று ஐஐடியில் சேர்ந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Last Updated : Apr 12, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.