ETV Bharat / state

வாக்குறுதிகள் காகிதத்தில் தேங்காமல் களத்திற்கு வர வேண்டும் - Tamilnadu assembly election

இரண்டு கட்சிகளும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை முக்கிய வாக்குறுதியாக இணைத்திருக்கிறார்கள். ஆனால், கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் எழுவர் விடுதலைக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்பதை தேர்தல் ரேஸில் இரண்டு கட்சிகளையும் எதிரியாக பார்க்கும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கேட்கின்றனர்.

adsf
dasf
author img

By

Published : Mar 23, 2021, 4:18 PM IST

தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தலின் வேகம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், வாக்குறுதிகள் அளித்தல் என பரபரத்த தேர்தல் களம், தற்போது பரப்புரையில் நிற்கிறது. தேர்தலிலேயே மிக மிக முக்கியமான கட்டம் வாக்குறுதிகள் அளிப்பது.

அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அப்படி தற்போது கோதாவில் இருக்கும், திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. அதேபோல், காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளும் வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன.

தேர்தல் வாக்குறுதி என்றாலே நினைவுக்கு வருவது திமுக. பேரறிஞர் அண்ணா தொடங்கி, தற்போதைய தலைவர் ஸ்டாலின்வரை அது தொடர்கிறது. கலைஞர் கருணாநிதி கட்சியின் வாக்குறுதிகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றார். அதேபோல் இப்போதும் திமுகவின் வாக்குறுதிகள் அப்படியே இருக்கிறது என பூரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

dasf

திமுகவின் வாக்குறுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரவு நேர காப்பகங்கள் என கூறியிருப்பது சிறப்பு வாய்ந்தது. டெல்லியில் இந்தத் வாக்குறுதி செயலில் இருந்தாலும் திமுகவுக்கு இது முக்கியத்துவம் நிறைந்தது. அதேபோல், மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்தாக பால் என முக்கிய அம்சங்களை வைத்துள்ளது.

மேலும், ஈழ படுகொலைக்கு காரணம் திமுகதான் என்ற விமர்சனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, எழுவர் விடுதலை என அறிவித்திருப்பது தனது மேல் உள்ள களங்கத்தை துடைப்பதற்கானது என்றாலும், கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது இரண்டு விஷயங்களும் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது.

fdsa

திமுக தனது தேர்தல் அறிக்கையை கதாநாயகனாக பார்த்தாலும் அதிமுக அதனை வில்லனாகவே பார்க்கிறது. தமிழ்நாடு கடன் அவ்வளவு இருக்கும்போது திமுகவினர் எப்படி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவார்கள், இலவச பேருந்து பயணத்தை நிகழ்த்துவார்கள் என்ற கேள்விகள் சிலரிடம் எழுகிறது.

fasd

இதே கேள்விதான் அதிமுகவுக்கும். ஏனெனில், தமிழ்நாட்டு கடன் சுமார் 5 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்க, அதிமுகவோ, இலவச வாஷிங் மெஷின்கள் வழங்கப்படும், விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்கள், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதிகளை தண்ணீராய் இரைத்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போது சிலிண்டர் விலையை குறைக்க முடியாத அரசா அடுத்த முறை செய்யவிருக்கிறது என எதிர்க்கட்சியினர் அம்பு எய்கிறார்கள்.

மேலும், இரண்டு கட்சிகளும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை முக்கிய வாக்குறுதியாக இணைத்திருக்கிறார்கள். ஆனால், கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் எழுவர் விடுதலைக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்பதை தேர்தல் ரேஸில் இரண்டு கட்சிகளையும் எதிரியாக பார்க்கும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கேட்கின்றனர்.

dsaf

அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வாங்குவோம் என்று திமுக முழங்கினால், நாங்கள் இரட்டை குடியுரிமை பெற்று தருவோம் என்கிறது அதிமுக. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

fad

முக்கியமாக கல்வி மாநில பட்டியலில் இணைக்கப்படும் என இரண்டு கட்சிகளும் அளித்திருக்கும் வாக்குறுதி வெறும் கண் துடைப்புக்கே என்கின்றனர் ஒருதரப்பினர். ஆட்சியில் இருந்தபோது நீட்டை தடுக்க முடியாத அதிமுகவா கல்வியை மாநில பட்டியலில் இணைக்க போராடும் என்று கேள்வி எழுப்பும் சிலர், திமுக வந்தாலும் இந்த விஷயத்தில் தீர்க்கமாக போராடுமா என்பதெல்லாம் மிகப்பெரிய சந்தேகம் என்கின்றனர்.

das

இலவசம் என்றாலே திமுகதான் என்ற பெயரை மாற்றி எழுதியிருக்கிறது அதிமுக. இந்தத் தேர்தல் அறிக்கையில் அதிமுகவே இலவச ஆயுதங்களை அதிகமாக அறிக்’கை’யில் எடுத்திருக்கிறது. ஆறு கேஸ் சிலிண்டர்கள், அனைவருக்கும் வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, விலையில்லா அரசு கேபிள் என அதிமுக அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறது.

இனி எப்போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை தெரிந்துகொண்டு அதிமுக இவ்வளவு இலவசங்களை அள்ளி வீசியிருப்பதாகவும் இந்த திட்டங்களுக்கெல்லாம் நிதிக்கு எங்கே போவது என எதிர்முகாம் கேள்வி எழுப்ப, நாங்கள் அறிவித்திருக்கும் திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானவைதான். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் நாங்கள் நிதி ஆதாரம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்கின்றனர் ஆளும் தரப்பினர்.

dfsa

தமிழ்நாட்டின் இரண்டுப் பிரதான கட்சிகளில் ஒரு கட்சி பூரண மதுவிலக்கு விஷயத்தை பேசவே இல்லை, ஒரு கட்சி படிப்படியாக குறைக்கப்படும் என்று மேம்போக்காக பேசியிருக்கிறத்து. ஆனால், காங்கிரஸ் கட்சியோ பூரண மதுவிலக்கு என்று உறுதியளித்திருக்கிறது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் அரசின் ஆண்டு வருமானம் 100 கோடிகளுக்கு குறைவாக இருந்தபோதே பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. இப்போதைய அரசின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடியாக இருக்கும்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் தயக்கம் காட்ட தேவையில்லை என்று கூறியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்வரை மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். ஒவ்வொரு தாலுகாவிலும் குடிக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படுமென்று ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளது. மதுவிலக்கு முழுவதுமாக சாத்தியமில்லை என்று கூறப்படும் மாநிலத்தில், பூரண மதுவிலக்கு என்று காங்கிரஸ் அறிவித்திருப்பதே பாராட்டுக்குரியது.

fads

முக்கியமாக, பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாதபட்சத்தில், தாலுகா அளவில் மறுவாழ்வு மையம் என்ற வாக்குறுதி அளித்ததற்காக கைக்கு நிச்சயம் நாம் கை கொடுக்கலாம்.

போக்குவரத்து வசதிகள் என்ற வாக்குறுதியில், முக்கியமான பேருந்து நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளின் தரம் உயர்த்தப்ப்ட்டு அங்கு ஆண், பெண் பயணிகளுக்கு தனி குளியல் கழிப்பிட வசதிகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிக்கு வரவேற்பு கிடைத்தாலும், முக்கியமான பேருந்து நிலையங்களுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்படுகிறது என்றால் சாதாரண பேருந்து நிலையங்களுக்கும் செய்ய வேண்டும். அதிக கிராமங்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அந்தந்த கிராமங்களின் அருகில் இருக்கும் அனைத்து நகர பேருந்து நிலையங்களுக்கும் இந்த வசதி செய்துகொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் எழுந்திருக்கிறது.

இருந்தாலும், தமிழ்நாட்டில் தற்போதைய அரசின் கஜானா காலி ஆகி கடன் அதிகரித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைக்கும்போது இது எப்படி சாத்தியம் என்று ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர்.

dsfa

அதுமட்டுமின்றி, மாநகரங்களில் மகளிர், மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியிருப்பது சாத்தியமே இல்லை என்று போக்குவரத்து துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். இப்போதே கடன், ஓய்வூதிய பிரச்னை என்று எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தீர்க்கவே காலம் ஆகும். இந்தச் சூழலில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது சாத்தியம் இல்லாத ஒன்று என வாதம் வைக்கிறார்கள் அவர்கள்.

அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று கூறியிருப்பது வரவேற்கக்கூடிய விஷயம்தான். ஆனால், இருக்கின்ற கடனில் மேற்கொண்டு சுமை ஏற்றுவதுபோல்தான் இந்த வாக்குறுதி இருக்கிறது. இந்த வாக்குறுதியை செயல்படுத்தினால் ஏற்படப்போகும் நிதி சிக்கல்களை திமுக ஆட்சிக்கு வந்து திறம்பட சமாளிக்க வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள்.

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும், மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால் அவர்களை பாராட்டி ரூ 3 லட்சம் பரிசு வழங்கப்படும், ஆணவ படுகொலை செய்வதை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

ad

திமுகவின் தேர்தல் அறிக்கையில், கலப்பு திருமணங்களை ஊக்குவித்து, பிறப்பு அடிப்படையிலான சாதி, இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமை ஒழிப்பு நோக்கில், தி.மு.க., ஆட்சி காலத்தில், கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட, 'அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம்' புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த, அரசாணை வெளியிடப்படும்.

கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் மற்றும் தாலிக்கு, 8 கிராம் தங்ககாசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாங்கள் மதச்சார்பற்ற கூட்டணிதான் என்பதை இரண்டு கட்சிகளும் நிரூபித்திருக்கின்றன. இந்த வாக்குறுதிகள் செயல்படும்பட்சத்தில் காங்கிரஸின் முகம் தமிழ்நாட்டில் சிறிது மாற வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

afda

காங்கிரஸின் வாக்குறுதியில், மீனவர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுத்து அவர்களை மாண்புடன் வாழ வைக்க காங்கிரஸ் சபதமேற்கிறது என்ற வாக்குறுதி ஒன்றை அளித்திருக்கிறது. காங்கிரஸின் இரண்டு ஆட்சிக்காலங்களிலும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த பெயரை இன்னும் காங்கிரஸ் இழக்கவில்லை.

மீனவர் நலன் என்று காங்கிரஸ் கொடுத்திருக்கும் அத்தனை வாக்குறுதிகளையும் சமரசமின்றி நிறைவேற்றினால் அந்த பெயர் காங்கிரஸைவிட்டு விலக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் மூத்த கதர்காரர்கள்.

இரண்டு கட்சிகளும் இப்படி ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. அதில் சாத்தியத்திற்குட்பட்டவை, சாத்தியத்திற்கு கடினமானவை, முரணானவை என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.

சாத்தியத்திற்குள்பட்டவைகளை எளிதாக செயல்படுத்தி, சாத்தியத்திற்கு கடினமானவைகளை முடிந்தளவு செயல்படுத்தி, முரணாவைகளை களைந்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்கள் மேலும் எழும் என்பதே கள யதார்த்தம்.

பாஜக தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு, இந்து கோயில்களுக்கு தனி வாரியம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றன.

fasd

திமுக, அதிமுக மதுவிலக்கு குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்காத சூழலில், காங்., பாஜக ஆகிய கட்சிகள் தங்களது அறிக்கையில் மதுவிலக்கை பேசியிருப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.

மேலும், பாஜக தனது தேர்தல் அறிக்கையில், 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தாலும் ஆட்சியில் இருக்கும்போது இளைஞர்கள் பக்கோடா போட வேண்டும் என்று பேசிய பிரதமர் சேர்ந்த பாஜகவா வேலை வாய்ப்பை உருவாக்கப்போகிறது என்று முணுமுணுப்பு கேட்கிறது.

இது இப்படி இருக்க மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கும், எதிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும். அன்றாட பயன்பாட்டு மற்றும் அரசு மொழியாக்கப்படும். இரு மொழிக் கொள்கை தொடரும். தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளை, விருப்ப பாடமாக படிக்கலாம். புதுவித ஆங்கில மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

adf

மேலும், நுழைவுத் தேர்வே கூடாது என்று கூறிக்கொண்டிருக்கும் மாநிலத்தில், நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு அமல்படுத்தப்படும் என்று மநீம கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல் டிடிவி தினகரனின் அம்மா முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நேரடிப் பார்வையில் கிராமப்புறங்களிலும், பேரூர்களிலும் பல்வேறு வகையான தொழிலகங்களை உருவாக்கி, அதன் வழியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என கூறியிருப்பது மற்ற கட்சிகள் அணுகாத திட்டமாக பார்க்கப்படுகிறது.

afds

இப்படி அனைத்து கட்சிகளும் அறிக்கையில் வாக்குறுதி எனும் ஆயுதங்களை எடுத்திருக்கின்றன. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாய் அளவில் மட்டும் இல்லாமல் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

காகிதத்தில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதிகள் அங்கேயே தேங்கிவிடாமல், களத்தில் செயல்படுத்தப்படுமா என்பது காலத்துக்குள் இருக்கும் பதில்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.