ETV Bharat / state

உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லாம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

election commission
election commission
author img

By

Published : Mar 1, 2021, 3:55 PM IST

தேர்தல் ஆணையம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லக் கூடாது என கட்டுபாடுகள் விதித்தது. இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், எதிர்வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, நடத்தை விதிகள் அமலுக்கு வரும் போது, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி, கோயம்பத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அதற்காக குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உரிய ஆதாரங்களை காட்டி, கூடுதல் பணத்தை எடுத்துச் சொல்லலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம், சோதனைகள் நடத்தலாம் எனவும், ஒட்டுமொத்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உரிய ஆதாரங்களை காட்டி, 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் எனவும், ஆதாரங்கள் காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'பொய் வழக்குத் தொடர்ந்ததாக விசாரணை அலுவலர் மீது வழக்கு தொடர முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.