இந்தியாவில் கரோனா வைரஸால் 160-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனோ பெருந்தொற்று பரவாமலிருக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, இன்று ஒரேநாளில் மட்டும் 84 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ரத்துசெய்யப்பட்டுள்ள விமானங்கள்:
இலங்கைக்குச் செல்லும் நான்கு விமானங்கள், குவைத்துக்குச் செல்லும் மூன்று விமானங்கள், மலேசியாவிற்குச் செல்லும் ஆறு விமானங்கள், மஸ்கட் செல்லும் மூன்று விமானங்கள், துபாய் செல்லும் இரண்டு விமானங்கள், தாய்லாந்து செல்லும் இரண்டு விமானங்கள், தோகா, சிங்கப்பூா், ஜெர்மனி, பக்ரைன், லண்டன் ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் தலா ஒரு விமானம் என்று மொத்தம் 25 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல, சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 25 விமானங்கள் என 50 சர்வதேச விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதைப் போலவே, போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் நான்கு விமானங்கள், பெங்களூரு செல்லும் நான்கு விமானங்கள், மும்பை செல்லும் மூன்று விமானங்கள், மதுரை, ஹைதராபாத், கொச்சி, கோவா, கொல்கத்தா, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்குச் செல்லும் தலா ஒரு விமானம் வீதம் 17 விமானங்களின் சேவையும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. விமானங்களின் ரத்தால் பயணிகள் கடுமையான சிரமங்களை சந்தித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தீவிரமடையும் கரோனா- தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளதா? பார்க்கலாம்