சென்னை மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் எழிலகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் காட்டப்படாத 35 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் 30 உதவியாளர்களிடமிருந்து தலா 5 லட்சம் வீதம் நடராஜன் லஞ்சமாக பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து நடராஜனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : 'மாமன்னன்' படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு!