ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி; 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Michaung cyclone: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Heavy Rain in Chennai due to Michaung cyclone
மிக்ஜாம் புயல் பாதிப்புகள் சென்னை மழை வெள்ளம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 3:00 PM IST

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 380 கி.மீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 380 கி.மீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து (டிச.4) இன்று முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது, சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களை தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (5.12.2023) ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, நாளை (டிச.5) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒத்திவைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்ற நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக நாளை நடக்க இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்துள்ளார். மேலும், தள்ளி வைக்கப்படும் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.