சென்னை: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனை அடுத்து வரும் 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கக் கூடும்.
தொடர்ந்து இது வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று(டிச.9) இரவு அல்லது நாளை(டிச.10) அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே உள்ள பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான கடற்கரைகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மெரினா, எண்ணூர், காட்டுப்பள்ளி, பெசன்ட் நகர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் உருவாகியுள்ளது. கடல் சீற்றம் காரணமாக கரையைத் தாண்டி அலைகள் வந்து செல்கின்றன.
கடல் சீற்றத்தை அடுத்து மெரினா கடற்கரை முழுவதுமாக மூடப்பட்டது. பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். மேலும் மாண்டஸ் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி