ETV Bharat / state

பராமரிப்புப் பணி காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்...!

author img

By

Published : Nov 22, 2020, 6:40 AM IST

அவசர தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக இன்று (22 நவம்பர்) சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

due-to-maintenance-work-e-change-of-schedule-in-metro-rail

அவசர தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையம் சென்று மாறி செல்ல வேண்டும்.

வண்ணாரப்பேட்டை முதல் ஏ.ஜி. டிஎம்எஸ் வழியாக விமான நிலையம் செல்லும் நீல நிற வழித்தடம் மற்றும் எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் ரயில் நிலையத்தில் தொடங்கி விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வழித்தடத்தில் 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

தண்டவாள பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வாரிசு அரசியலை ஒழிப்போம்' - அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.