ETV Bharat / state

300 கிலோ போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - சென்னையில் ஒருவர் கைது! - today news in tamil

NIA arrests one person relation drug smuggling: விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் சென்னையில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

என் ஐ ஏ
என் ஐ ஏ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 2:01 PM IST

சென்னை: கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை ரோந்துப் பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் விழிஞ்சம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளது.

சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர். இவர்களிடமிருந்து பல மொபைல் போன்கள், சிம் கார்டுகள், டிஜிட்டல் ஆவணங்கள் போதைப்பொருள் கடத்தலுக்கான ஆவணங்கள், 80 லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒன்பது கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற விவகாரத்தில் ஈடுபட்டதும் அதற்காக சர்வதேச போதை பொருள் கும்பலுடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த ஹஜி சலீம் பல்வேறு வெளிநாட்டு வாட்ஸ் அப் எண்களை பயன்படுத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் வியாபாரத்தை வெகு விமரிசையாக நடத்தியது தெரியவந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடிக்க முடியாத வண்ணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் தங்கம் ஆகியவை இந்த போதைப் பொருள் வியாபாரத்திற்காக ஹவாலா முறையில் சென்னையிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் செய்ய பணப் பரிவர்த்தனைக்கு கிரிப்டோ கரன்சியும் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவ்வழக்கில் ஆதி லிங்கம் என்பவரை சென்னையில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட லிங்கம் ஏற்கனவே சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் குணசேகரனின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குணசேகரனின் பினாமியாக செயல்பட்டு பல்வேறு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ய உதவியதும், குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தலுக்கான சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு உதவி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் லிங்கம் போல் ஆவணங்களை பயன்படுத்தி இந்த போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்க உதவி புரிந்திருப்பதும், போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக கிடைக்கும் பணத்தை இந்தியா மற்றும் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கம் உருவாக்க உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையும் படிங்க:முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் மின்சார கண்ணியில் சிக்கி பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.