சென்னை: 90-வது பிறந்த நாளை கொண்டாடிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சமூக நீதி மண்ணை காவி மயமாக மாற்ற வேண்டும் என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் நினைப்பதாகவும், அதனை முறியடிக்க முதல் ஆளாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
90 வயது என்ற அடையாளம் துவங்கினாலும், என்றும் பெரியாரின் கொள்கைகளில், அவரின் தொண்டனாக வாழ்ந்து வருவதாகவும், பிறந்த நாள் வாழ்த்து என்பது கொள்கை பயணத்தில் தவிர்க முடியாதது என்றும் கூறினார்.
சனாதனத்திற்கு எதிரான திராவிட மாடல் ஆட்சியினை பாதுகாக்க திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று கி.வீரமணி தெரிவித்தார். சமூக நீதிக்கு எதிராக வியூகம் வகுக்கப்படுவதாகவும், சமூக நீதி மண்ணை காவி மயமாக மாற்ற வேண்டும் என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் நினைப்பதாகவும் அதனை முறியடிக்க முதல் ஆளாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராகவும், உரிய இடஒதுக்கீட்டை இழக்காமல் இருக்கவும் சட்டப்போராட்டம் அரசு நடத்தினாலும், மக்கள் போராட்டத்தை தொடர்ந்து திராவிட இயக்கம் நடத்தும் என்று கி.வீரமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை மீட்டெடுக்கவே தமிழ் சங்கமம் - ஆளுநர்