நீண்ட இடைவேளைக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார் நடிகர் சிம்பு. இந்நிலையில் இந்தப் பொங்கலுக்கு அவருடைய ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது.
அதேபோன்று அவரது நடிப்பில் ’மாநாடு’, ’பத்துதல’ உள்ளிட்ட படங்களும் வரிசையில் உள்ளன. இதில் மாநாடு படமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் பல வருடங்களாக எடுக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இடையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு படத்தைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து மாநாடு படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறது.
மேலும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஈஸ்வரன் ரிலீஸ், மாநாடு அப்டேட் என சிம்பு ரசிகர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: அருண் விஜய்யின் புதிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படப்பிடிப்பு நிறைவு