ETV Bharat / state

'கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்றுக' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு வழங்குவதற்கு கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசு ஆணையை நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்றுக

author img

By

Published : Aug 17, 2021, 11:39 AM IST

Updated : Aug 17, 2021, 12:45 PM IST

சென்னை: இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது, "முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிவருகிறார்.

மேலும் கரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு, சுதந்திர தினத்தன்று துணிச்சலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்த மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்.

எதிர்பார்ப்போடு காத்திருந்தோம்

தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை எந்த முதலமைச்சரும் சந்தித்திராத வகையில், ஆட்சி பொறுப்பேற்றபோது, கரோனாவின் தாக்கத்தால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இருப்பினும் முதலமைச்சர் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

அன்றுமுதல் இன்றுவரை நம் முதலமைச்சருக்கு கரோனா பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம், அரசு மருத்துவர்களும் நினைவில் வருவர் என்று நம்புகிறோம். கரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் பலமாகக் களத்தில் நிற்பது 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தாம் என்பது முதலமைச்சருக்கு நன்றாகவே தெரியும்.

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறேன் எனப் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, உண்மையில் ஒவ்வொரு மருத்துவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். விரைவில் நம் கோரிக்கை நிறைவேறப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு அன்றுமுதல் காத்திருக்கிறோம்.

நேரடியாக உறுதி அளித்த முதலமைச்சர்

அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது முதலமைச்சர் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது அடுத்து அமையும் நம் ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தம் ஒவ்வொரு மருத்துவரிடத்திலும் இருக்கிறது.

முந்தைய ஆட்சியில் ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய மருத்துவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டபோதும், மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தன் உயிரையே தியாகம் செய்தபோதும், முதலமைச்சர் முந்தைய அரசைக் கண்டித்ததோடு, வருத்தத்தைப் பதிவுசெய்தார். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவர்கள் ஊதியக் கோரிக்கைக்காக இவ்வளவு பெரிய விலை கொடுத்த பிறகும் கோரிக்கை நிறைவேறவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆதீனத்திடம் நிர்வாகம் ஒப்படைப்பு

இந்தக் கடினமான நேரத்தில் முதலமைச்சரின் பார்வை எங்கள் மீது விழ வேண்டும். கடந்தாண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணிகளை நினைவில்கொண்டு கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் அரசை வலியுறுத்தினார்.

கருணாநிதி போட்ட உத்தரவு

மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தைவிட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ஊதியம் தரப்படுவதை முதலமைச்சர் விரும்ப மாட்டார் என்று கருதுகிறோம். இது மக்களின் அரசு மட்டுமன்றி மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் அரசாகவும் இருக்கும் என மருத்துவர்கள் தினத்தன்று முதலமைச்சர் சூளுரைத்தார்.

கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையைத்தான் நிறைவேற்ற வேண்டுகிறோம். எனவே ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாள்கள் நிறைவுசெய்துள்ள இந்த நேரத்தில், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 இன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதலமைச்சரை வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

இதன்மூலம் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவர்கள் இன்னமும் உற்சாகமாகப் பணி செய்ய வழிவகுக்கும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அப்போ அணில்; இப்போ பாம்பு? - செந்தில்பாலாஜி எடுத்த நாக அஸ்திரம்!

Last Updated : Aug 17, 2021, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.