ETV Bharat / state

விவசாயிகளுக்காக போராட்ட கொடி தூக்கும் திமுக - DMK district meeting

சென்னை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் ஐந்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிசம்பர் 5ஆம் தேதி திமுக போராட்டம்
டிசம்பர் 5ஆம் தேதி திமுக போராட்டம்
author img

By

Published : Dec 3, 2020, 5:06 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை காணொலி மூலமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 60க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் ஐந்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்திலும், பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரத்திலும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சியிலும், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி ஆகியோர் திண்டுக்கல்லிலும், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டிலும், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா நீலகிரியிலும், அந்தியூர் செல்வராஜ் நாமக்கலிலும் பங்கேற்க உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.